பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் : விலை உயர்வை திரும்ப வலியுறுத்தல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.04 பைசாவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 04 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் லிட்டர் ரூ.69-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை உயர்வால் ரூ.71.16 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் ரூ.58.82 பைசாவுக்கு விற்பனை செய்த டீசல் விலை உயர்வால் ரூ.60.16 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்தும், குறைத்தும் வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.