Breaking News
சிறு முதலீட்டில் மீண்டும் திகில் படம்: இயக்குநர் விஜய் திட்டம்

‘வனமகன்’ படத்தைத் தொடர்ந்து சிறு முதலீட்டில் நாயகியை முன்வைத்து திகில் படமொன்றை இயக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

ஜெயம் ரவி, சைஷா சைகல், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வனமகன்’. விஜய் இயக்கி தயாரித்துள்ளார். ஏப்ரல் 22ம் தேதி இசையும், மே மாதம் பட வெளியீடும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘வனமகன்’ படத்தைத் தொடர்ந்து, மாதவன் – சாய் பல்லவி நடிப்பில் உருவாகவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் விஜய். இது ‘சார்லி’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

தற்போது ‘சார்லி’ ரீமேக் தள்ளிப் போவதால் அதற்கு முன்பாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார். குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் சிறு முதலீட்டில் இப்படம் உருவாகவுள்ளது. முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகவுள்ள இதில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.