Breaking News
அமெரிக்காவை வம்புக்கு இழுக்கும் வடகொரியா

வடகொரியா வீசும் குண்டுகள் அமெரிக்க நகரத்தை தாக்குவது போலவும், அதில் அமெரிக்க தேசியக்கொடி எரிந்து சாம்பலாவது போன்றும் சித்தரித்து வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வம்புக்கு இழுக்கும் வடகொரியா :

வடகொரியாவின் மூத்த தலைவரான இரண்டாம் கிம் சங்க்கின் 150 வது நினைவு தினம் அந்நாட்டில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், நிகழ்ச்சி ஒன்றின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், வடகொரியா வீசும் குண்டு அமெரிக்க நகரை தாக்குவது போன்றும், அந்த வீடியோவின் முடிவில் அமெரிக்க தேசியகொடி எரிவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது முதல் முறையல்ல :

வடகொரியா, அமெரிக்காவை வம்புக்கு இழுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2013 ம் ஆண்டும் கொலம்பியா, கலிபோர்னியா, ஹவாய் மாகாணங்களில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுவது போன்ற வீடியோவை வடகொரியா வெளியிட்டவது. மேலும், அமெரிக்க ராணுவத்தினரை குழந்தைகள் அழுவதை போன்ற போஸ்டர்களை வடகொரிய அரசே வெளியிட்டது. தொடர்ந்து அமெரிக்காவை கடந்து செல்லும் ரயிலை பார்த்து குரைக்கும் நாய் போன்றும் சித்தரித்து போஸ்டர் வெளியிடப்பட்டது.
வடகொரியாவின் இந்த தொடர் அத்துமீறல்களால் இரு நாடுகளிடையே பதற்றமான நிலை உருவாகி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.