Breaking News
டிக்கெட் முன்பதிவு: ‘தங்கல்’ சாதனையை முறியடித்தது ‘பாகுபலி 2’

புக் மை ஷோ டிக்கெட் முன்பதிவு இணையத்தில், ‘தங்கல்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது ‘பாகுபலி 2’

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் ‘பாகுபலி 2’. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை(ஏப்ரல் 28) வெளியாகவுள்ளது.

மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மற்றும் இணையம் மூலமாக டிக்கெட் விற்பனை என முதல் 4 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஃபுல்லாகிவிட்டன.

இந்நிலையில், புக் மை ஷோ இணையத்தில் டிக்கெட் முன்பதிவில் ‘தங்கல்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது ‘பாகுபலி 2’. படம் வெளியாக 2 நாட்களுக்கு முன்பே முன்பதிவின் மூலமாக சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

இச்சாதனை குறித்து புக் மை ஷோ இணையம் தரப்பிலிருந்து, ” ‘பாகுபலி 2’க்கான முன்பதிவு முன்னெப்போதும் இல்லாத அளவு புக்மைஷோ தளத்தில் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் ‘பாகுபலி 2’ படத்துக்காக விற்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய ரசிகர்கள்தான் ரசிப்பார்கள் என ஒரு பார்வை இருந்தாலும், இந்தி பேசும் மக்களிடையேயும் படத்துக்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது. தென்னகத்தில் அனைத்து திரையரங்குகளும் சரியான அட்டவணையை வெளியிட்டதும் ‘பாகுபலி 2’க்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்னும் வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.