வீதி மீறல் கட்டடங்கள்: கங்கை நதி வழக்கு
இந்தியாவில் வற்றாத ஜீவநதிகளான கங்கா, யமுனை, உள்ளிட்ட நதிகளுக்கு மனிதர்களை போன்றே அனைத்து அடிப்படைஉரிமைகளும், வாழ்வாதார உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என உத்தர்க்காண்ட் ஐகோர்ட் கடந்த மார்ச் மாதம் அதிரடி உத்தரவிட்டது.
இதனை மேற்கோள்காட்டி, ரிஷிகேஷை சேர்ந்த ஒருவர் உத்தர்கண்ட் ஐகோர்ட்டில் தொடர்ந்த பொது நல வழக்கில், வற்றாத ஜீவநதிகளுக்கு மனிதனுக்குரிய அந்தஸ்து தரப்பட்டுள்ளதால், இங்கு விதிமீறி கட்டப்பட்டுள்ள அகழிகள், கட்டங்களை அகற்றி நதியை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.கே. பஷீத், அலோக் சிங், கொண்ட டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு, மனித அந்தஸ்து வழங்கப்பட்ட கங்கை நதியை பாதுகாத்து அதனை பராமரிக்க வேண்டியது நமது கடமை எனவே கங்கை நதி சார்பில்,மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ரிஷிகேஷ் நகராட்சி, உத்தர்காண்ட் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கிறோம். வழக்கு மே 8 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் கங்கை நதி முதல்முறையாக மனித அந்தஸ்துடன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.