Breaking News
கோடநாடு சம்பவத்தில் 4 பேர் கைது; 5 பேர் தலைமறைவு: விபத்தில் பலியானவர் முக்கிய குற்றவாளி – கொள்ளை முயற்சிக்கு சதித் திட்டம் தீட்டியவர்: எஸ்.பி. தகவல்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகி உள்ள 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக, நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா கூறியதாவது:

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் வீட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளார். இவர்தான் இந்த கொள்ளை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டினார். இவரது நண்பர் ஷயான் சாலை விபத்தில் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக திருச் சூரை சேர்ந்த அ.சந்தோஷ் சமி(39), தி. தீபு(32), ச.சதீசன்(42) மற்றும் அ.உதயகுமார்(47) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 5 குற்றவாளிகள் தலை மறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பணத்துக்காக கொள்ளை

கோடநாடு எஸ்டேட்டில் பெரு மளவில் பணம் இருப்பதாக கருதி, அதை கொள்ளை அடிக்க கனகராஜ் திட்டம் தீட்டியுள்ளார். எஸ்டேட்டில் காவலுக்கு நாய்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதை உறுதி செய்து, கடந்த 24-ம் தேதி அதிகாலை 11 பேர், போலி நம்பர் பிளேட் உடைய இன்னோவா, போர்டு என்டோவர் மற்றும் சாண்ட்ரோ வாகனங்களில் எஸ்டேட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு, கிருஷ்ண பகதூரை 8-ம் எண் நுழைவு வாயில் அருகேயுள்ள லாரியில் கட்டிப் போட்டனர். பின்னர் 10-ம் நுழைவு வாயிலில் ஓம் பகதூரை பெட்ஷீட்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து மரத்தில் கட்டிப் போட்டனர். மேலும், அவர் களது செல்போன்களை பறித்தனர்.

பின்னர், ஜன்னல் கண்ணாடி களை உடைத்து பங்களாவினுள் சென்றுள்ளனர். முன்னாள் முதல் வர் ஜெயலலிதா, சசிகலா அறை களின் கதவுகளை உடைந்து உள்ளே நுழைந்தனர். ஆனால், அங்கு பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பின்னர், அங்கி ருந்த 5 கடிகாரங்கள் மற்றும் கிரிஸ் டல் அலங்காரப் பொருளை எடுத் துக்கொண்டு வெளியேறிவிட்டனர்.

கோடநாட்டிலிருந்து 6 பேர் இன்னோவா மற்றம் போர்டு வாகனங்களில் கூடலூர் வழியாகத் திரும்பி விட்டனர். கனகராஜ் மற்றும் ஷயான், சாண்டிரோ வாகனத்தில் கோவைக்கு சென்றனர். மீதமுள்ள வர்கள் பேருந்துகளில் தப்பினர்.

இன்னோவா மற்றும் போர்டு வாகனங்கள், கூடலூரில் நடந்த வாகன சோதனையில் சோதனை யிடப்பட்டு அனுப்பப்பட்டது.

விசாரணையில், இந்த வாகனங் களில் சென்றவர்கள்தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிட மிருந்து இன்னோவா வாகனம் மற்றும் கிரிஸ்டல் அலங்கார பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடிகாரங்கள் கேரளாவில் உள்ள ஆற்றில் வீசி எறிந்துள்ளனர்.

கோடநாட்டில் கொள்ளையில் ஈடுபடவே குற்றவாளிகள் நுழைந்த னர் என தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் அரசியல் சர்ச்சைகள் அல்லது நோக்கம் இல்லை. இவ்வாறு எஸ்.பி. தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.