Breaking News
டோனி, சச்சினை தொடர்ந்து சாய்னாவின் வாழ்க்கையும் படமாகிறது

சமீப காலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னர் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற வெளியாகியது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதே சச்சின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட உள்ளது.

இதில் சாய்னா நேவாலாக ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சாய்னா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அமோல் குப்தா இயக்க உள்ளதாக ஷ்ரத்தா கபூர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் சாய்னா வேடத்தில் நடிப்பது சவாலானதாக இருக்கும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.