மீண்டு(ம்) வந்தார் மரியா ஷரபோவா
ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா (30 வயது), ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 15 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தடைக்காலம் முடிந்த நிலையில், ஜெர்மனியில் நடைபெறும் ஸ்டட்கர்ட் ஓபன் தொடரில் விளையாட அவருக்கு சிறப்பு அனுமதி (வல்டு கார்டு) வழங்கப்பட்டது. இதற்கு முன்னணி வீராங்கனைகள் பலர் கரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ஷரபோவா ஒரு மோசடிப் பேர்வழி’ என்று கனடா வீராங்கனை யூஜெனி பவுச்சார்டு ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விமர்சனங்களை பொருட்படுத்தாமல் மீண்டும் களமிறங்கியுள்ள ஷரபோவா, வெற்றிகளைக் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக இருப்பதால் நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ள நிலையில், தரவரிசையில் ஷரபோவா விரைவில் ‘டாப் 5’ல் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.