10 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 289 போலீஸாருக்கு முதல்வர் பதக்கம்: காவல் ஆணையர் வழங்கினார்
தமிழக காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித புகாருக்கும் உள்ளாகாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர் களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டுக்கான தமிழக முதல மைச்சர் காவல் பதக்கங்கள் பெறு வதற்கு, சென்னை பெருநகரக் காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித புகாருக்கும் உள்ளா காமல் துறைரீதியான தண்டனையுமின்றி சிறப்பாக பணிபுரிந்த சட்டம் – ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 106 காவலர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 86 காவ லர்கள், ஆயுதப்படையில் பணி புரியும் 69 காவலர்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் 28 காவலர்கள் என மொத்தம் 289 காவலர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்களுக்கு பதக் கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடை பெற்றது. சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் கரன்சின்ஹா, 289 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கி வாழ்த்துகளை தெரி வித்தார். சென்னை பெருநகரக் காவல் கூடுதல் ஆணையர்கள் அபய்குமார் சிங், பி.தாமரைக் கண்ணன், எஸ்.என்.சேஷசாயி, கே.சங்கர், எச்.எம்.ஜெயராம், எம்.டி.கணேசமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.