என் தந்தையின் உயிர் தியாகத்திற்கு எதிரியின் 50 தலைகள் வேண்டும், வீரமரணம் அடைந்த வீரரின் மகள்
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை கொடுப்போம் என இந்திய ராணுவம் சபதமிட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்போதும் போல் மறுப்பு தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தானுக்கு கடும் பதிலடியை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது.
இந்நிலையில் என்னுடைய தந்தையின் உயிர் தியாகத்திற்கு எதிரியின் 50 தலைகள் வேண்டும் என வீரமரணம் அடைந்த வீரரின் மகள் பேசிஉள்ளார். வீரமரணம் அடைந்த தலைமை காவலர் பிரேம் சாகரின் மகள் சரோஜ் பேசுகையில், “என்னுடைய தந்தையின் உயிர்தியாகத்தை மறந்துவிடக்கூடாது, என்னுடைய தந்தையின் உயிர் தியாகத்திற்கு எதிரியின் 50 தலைகளை எடுக்கவேண்டும்,” என ஆவேசமாக பேசிஉள்ளார். அவருடைய சகோதரர் பேசுகையில், “என்னுடைய சகோதரன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில் பெருமை அடைகிறோம், ஆனால் அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் தலை துண்டிக்கப்பட்டார் என்பது இதயத்தை உடையசெய்கிறது,” என கூறிஉள்ளார்.