தக்காளி புளிக் காய்ச்சல்
என்னென்ன தேவை?
தக்காளிப் பழம் – 10
கொடம்புளி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்)
– நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
பூண்டுப் பல் – 10
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தக்காளியை நன்றாகக் கழுவி, நான்கு துண்டுகளாக நறுக்கி, மண் சட்டியில் உப்பு போட்டுக் கிளறி ஒரு நாள் முழுக்க மூடிவையுங்கள். மறு நாள் தக்காளியை ஆவியில் வேகவைத்து தோல் நீக்கி ஒரு நாள் வெயிலில் காயவையுங்கள். கொடம்புளியை முதல் நாள் இரவே ஊறவைத்துக்கொள்ளுங்கள். தக்காளி, கொடம்புளி, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
பூண்டை நசுக்கிக்கொள்ளுங்கள். கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து சேர்த்துத் தாளியுங்கள். நசுக்கிய பூண்டைச் சேர்த்து, முறுகலாக வதக்குங்கள். அதில் தக்காளி கலவை, பெருங்காயம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, இறக்கிவையுங்கள். இந்தத் தக்காளிக் காய்ச்சலைச் சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். பல நாள் வைத்துச் சாப்பிடலாம்