Breaking News
தரவரிசையில் சிந்து, சாய்னாவுக்கு சரிவு

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை யில் இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் தலா ஒரு இடம் பின்தங்கி உள்ளனர்.

சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் கால் இறுதி வரை முன்னேறிய சிந்து, தரவரிசையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேவேளை யில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்றுடன் வெளியேறிய சாய்னா ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்தில் உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜெய் ஜெயராம் 13-வது இடத்தை பிடித்துள்ளார். சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் தொடரில் பட்டம் வென்ற சாய் பிரணீத் ஒரு இடம் முன்னேறி 22-வது இடத்தில் உள்ளார். காந்த் 26-வது இடத்தையும், ஷமீர் வர்மா 27-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பிரனோய் ஒரு இடம் பின் தங்கி 30-வது இடத்தில் உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.