Breaking News
பிரபல நடிகருக்கு ‘லேடி பாடிகார்ட்’

கோலிவுட்டில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல ஹீரோக்கள் யாரும் தங்களுக்கு ‘பாடிகார்ட்’ நியமித்துக்கொண்டதில்லை. எங்கு சென்றாலும் தனியாகவே சென்று வருகின்றனர். பாலிவுட்டில் ஷாருக்கான் தொடங்கி எல்லா ஹீரோக்களுமே பாடிகார்ட் நியமித்திருக்கிறார்கள். ரசிகர்களிடமிருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு. சில சமயம் ரசிகர்களுக்கும், பாடிகார்டுகளுக்கும் தள்ளுமுள்ளு, மோதல் ஏற்படுவதுண்டு. ஆனால் ரசிகைகளிடம் பாடிகார்டுகளின் கெடுபிடி செல்லுபடியாவதில்லை. அவர்கள் முண்டியடித்து ஹீரோக்கள் அருகே சென்று செல்ஃபி எடுப்பது, கைகுலுக்குவது, முத்தமிடுவது என அத்துமீறுகின்றனர். சில பெண்களின் நீண்ட நகங்களால் ஷாருக்கான் கைகளில் சிராய்ப்புகள் ஏற்படுகிறது.

ரசிகைகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஷாருக்கான் பிரத்யேகமாக பெண் பாதுகாவலர்களை தனக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். ஒரு ஹீரோ பெண் பாடிகார்டுகளை ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதல்முறை. ஷாருக்கிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். அவர் எங்கு சென்றாலும் சூழ்ந்துகொள்வதில் தர்மசங்கடத்துக்கு ஆளாகி திணறிய அனுபவம் நிறைய ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி ஷாருக்கான் கூறும்போது,’நான் பெண்களை மதிக்கிறேன். பெண் ரசிகைகளை என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிறுத்த பெண் பாடிகார்டுகளை ஏற்பாடு செய்திருக்கிறேன்’ என்றார். ஏற்கனவே மனிஷாகொய்ராலா லேடி பாடிகார்டு வைத்திருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.