Breaking News
பெங்களூரு – பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 11 ஆட்டத்தில், 8 தோல்வி, 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளை பெற பெங்களூரு அணி முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் ஏற்கெனவே களமிறக்கப்படாத சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

அதிரடி வீரர்கள் என தம்பட்டம் அடிக்கப்பட்ட விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகியோர் இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்க தவறினர். இவர்களை நம்பியே ஒட்டுமொத்த பேட்டிங்கும் இருந்தது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத் தியது.

இவர்களில் ஒரு சிலர் ஓரிரு ஆட்டங்களில் திறனை வெளிப் படுத்தினாலும் கூட்டாக சேர்ந்து அணியை முன்னெடுத்துச் செல்ல தவறினர். இந்திய வீரர்களான மன்தீப் சிங், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படவில்லை.

பந்து வீச்சில் சாமுவேல் பத்ரி, யுவேந்திரா சாஹல், நாத் அர்விந்த் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனினும் பேட்டிங்கில் குறைந்த அளவிலான இலக்கையே கொடுப்பதால் பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிகாண முடியாத நிலையே உள்ளது.

பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் உட்பட 5 ஆட்டங்கள் எஞ்சியுள் ளது. இவற்றில் 4-ல் வெற்றியை பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. தோல்விகளால் துவண்டுள்ள பெங்களூரு அணியை வீழ்த்துவதற்கு பஞ்சாப் அணிக்கு தற்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீசனில் சதம் அடித்த ஹசிம் ஆம்லா 315 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார்.

கடந்த ஆட்டத்தில் 27 பந்து களில் அரை சதம் அடித்த மார்ட்டின் கப்திலிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். 9 ஆட்டங்களில் 193 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள கேப்டன் மேக்ஸ்வெல் இந்த சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன்குவிப்பு 44 ஆக உள்ளது. இதனால் சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் அவர் உள்ளார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய சந்திப் சர்மா, வருண் ஆரோன், அக் ஷர் படேல் ஆகியோர் இன் றைய ஆட்டத்திலும் எதிர ணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.

அணிகள் விவரம்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன்வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான்மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ்ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில்சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.