Breaking News
கடற்படை பணியில் சேரலாம்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள SAILOR MR (MUSICIAN) பணிக்கு இசைத்துறையில் ஆர்வமுள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

SAILORS FOR MR (MUSICIAN)-02/2017 BATCH.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

வயது:

01.10.1996 மற்றும் 30.9.2000 ஆகிய 2 தேதிகளுக்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். இசைத்துறையில் கூடுதல் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

சம்பளம்:

ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

விண்ணப்பதாரரின் இசைத்திறமை, உடற்தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

உடற்தகுதி:

குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம். மார்பளவு: குறைந்தது 5 செ.மீ சுருங்கி விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். எடை: உயரத்திற்கேற்ற எடை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 41 வார இசைப்பயிற்சிக்கு அனுப்பப்படுவர். பயிற்சியின்போது மாதம் ரூ.6,700 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும். மும்பை, கொல்கத்தா, டெல்லி, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commanding Officer (for Director of Music),
INS Kunjali,
Colaba,
MUMBAI- 400005.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.5.2017.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.