‘கிளாமர் ரோல் கொடுக்கல’ இயக்குனர் மீது தேஜஸ்வி புகார்
‘நட்பதிகாரம் 79’ படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. தெலுங்கில் பாபு பாக பிஸி என்ற ‘ஏ’ ரக படத்தில் நடித்துள்ளார். இதில் கவர்ச்சியாக நடித்து மேலும் சில படங்களில் வாய்ப்பு பிடித்து விட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். சமீபத்தில் பட ஹீரோ ஸ்ரீனிவாஸும், புதுமுகம் சுப்ரியாவும் நடித்த படுகவர்ச்சியான காட்சிகள் இணைய தளத்தில் லீக் ஆனது. ஆனால் பட புரமோஷனில் தனக்கு முக்கியத்துவம் தரப்படாததால் தேஜஸ்வி கோபம் அடைந்தார்.
இது பற்றி அவர் கூறும்போது, ‘கிளாமராக நடிக்க நான் தயாராக இருக்கிறேன், என்னை வைத்து சில கிளாமர் காட்சிகள் படமாக்குங்கள், டபுள் மீனிங் டயலாக்கும் ஒன்றிரண்டு கொடுங்கள் என இயக்குனர் நவீனிடம் கேட்டேன். ஆனால், உங்களுக்கு கவர்ச்சி கதாபாத்திரம் கிடையாது. நீங்கள் கேட்பதுபோல் உங்கள் சீனை மாற்ற முடியாது என கண்டிப்புடன் கூறிவிட்டார். இது எனக்கு ஏமாற்றமாகிவிட்டது’ என்றார்.