Breaking News
வருங்கால கணவருக்கு சமந்தா ஆடம்பர பரிசு

சமந்தா, நாக சைதன்யா திருமணம் விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சைதன்யா கார் பிரியர். ஆடம்பர கார்கள் பலவற்றை வாங்கி தனது இல்லத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். கடந்த வாரம் பி எம் டபிள்யூ ஆடம்பர புது கார் ஒன்றை வாங்கினார். படப்பிடிப்பு மற்றும் வேறு எங்கு சென்றாலும் அந்த காரில்தான் சுற்றி வருகிறார் சைதன்யா. இதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய். கார் பிரியரான சைதன்யாவே இந்த காரை வாங்கலாம். ஆனால் சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இதுபற்றிய சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

சமீபத்தில் சமந்தாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியை கொண்டாடிய சைதன்யா அவருக்கு தானே ருசியான சமையல் செய்து பரிமாறினார். அந்த நேரத்தில் இந்த கார் புக் செய்யப்பட்டிருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். சைதன்யாவுக்கு விரைவில் பிறந்த நாள் வரவிருக்கிறது. அதற்கு பரிசாக இந்த காரை சமந்தாவே வாங்கி அவருக்கு பரிசாக அளித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.