ஏமனில் கடத்தப்பட்ட பாதிரியார் இந்திய அரசு விடுவிக்க கோரிக்கை
ஏமனில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுனலில், தன்னை காப்பாற்றுமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டையத்தைச் சேர்நத பாதிரியார் தாமஸ் உழுனலி்ல், ஏமனில் ஏடன் தெற்குநகரில் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த போது கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.எஸ்.பயங்கரவாதிளால் துப்பாக்கி முனையில்கடத்திச் செல்லப்பட்டார்., பாதிரியார் கடத்தப்பட்டதை உறுதி செய்திருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். எனினும் பாதிரியார் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின.
இ்ந்நிலையில் நேற்று வீடியோ ஒன்று ஏமன் செய்தி இணையளத்தில் வெளியானது. அதில் பாதிரியார் உழுனலில் உடல் மெலிந்து, நீண்ட நரைத்த தாடியுடன் உள்ளார். மிகவும் சோகத்துடன் அவர் பேசிய காட்சி இடம் பெற்றுள்ளது. அதில் தன்னை பயங்கரவாதிகள் நல்ல முறையில் கவனித்துக்கொண்டனர்.எனினும் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளதாகவும், இந்திய அரசு தன்னை விடுவிக்க உதவிட வேண்டும் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.