Breaking News
தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை

தமிழகத்தில் கீழ் இயங்கும் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
1994ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கையை ரத்து செய்து விட்டு தமிழில் மட்டுமே தீர்ப்புகளை எழுத வேண்டும் என்று உத்தரவிடக் கோரி 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.