Breaking News
தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகிறது ‘வேலையில்லா பட்டதாரி 2’

தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. “எப்போது ’வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும்” என படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தார்கள்.

அதன்படி நேற்றிரவு ஜுலை 28-ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஜூலை 28-ம் தேதி தனுஷின் பிறந்த நாளாகும், அதனை முன்வைத்து வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.