Breaking News
குடிமராமத்துப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு ரூ.500 கோடி நிதி: ‘நபார்டு’ வங்கி அறிவிப்பு

ஏரிகளை புனரமைக்கவும், குடிமராமத்துப் பணிகளுக்காகவும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்க இருப்பதாக நபார்டு வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைமைப் பொதுமேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், விவசாயிகளின் வருவா யைப் பெருக்க உதவுவதிலும் நபார்டு வங்கி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விவசாயத்தின் பங்களிப்பு நாளுக்கு நாள் குறைந்து தற்போது 7 சதவீதமாக உள்ள நிலையில், மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர் என்பது கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்கு 3 காரணங்கள் உள்ளன. தமிழ் நாடு 95 சதவீதம் நீர் ஆதாரங்களையும், 85 சதவீதம் நிலத்தடி நீரையும் பயன்படுத்தும் நிரந்தரமான தண்ணீர் தட்டுப்பாடு கொண்ட மாநிலமாகும். விவசாயிகளுக்குத் தங்கள் விளைப்பொருட்களுக்கான லாபகரமான விலை கிடைப்பதில்லை. விவசாயப் பொருட்களின் விற்பனை விலையில் மிகக் குறைவாக 35 சதவீதம் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. மேலும், வங்கிகள் வழங்கும் மொத்த கடன் அளவில் நீண்டகால முதலீட்டு கடன்களின் அளவு 14 சதவீதம் மட்டுமே.

அதிகரிக்கும் வெப்பநிலை, மழை பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் போன்ற கால நிலை மாறுபாடுகள் காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் தமிழக அரசுக்கு உதவ நபார்டு முன்வந்துள்ளது. இதன்படி, ஏரிகளை புனரமைக்கவும், குடிமராமத்துப் பணிகளுக்காகவும் ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்க இருக்கிறது.

மேலும், தமிழக அரசுடன் இணைந்து விவசாயப் பொருட்கள் விற்பனைக் கூடங்களை நவீனப்படுத்தவும், மின்னணு வர்த்தகத்தை அறிமுகப்படுத்தவும் பிற நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் தவும், அவற்றை தேசிய விவசாய சந்தை யுடன் இணைப்பதற்கும் நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயி களுக்கு அவர்களின் விளைப்பொருட் களுக்கு மிகச் சிறந்த விலை கிடைக்கும்.

விவசாயிகளையே உரிமையாளர் களாகக் கொண்ட விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க நபார்டு உதவுகிறது. தமிழகத்தில் தற்போது 170 விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

கடந்த 2016-17-ம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுவைக்கு ரூ.13,792 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. இதில், ரூ.4,451 கோடி வங்கிகளுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால மறு நிதியாகும். ரூ.3,723 கோடி கூட் டுறவு மற்றும் வட்டார ஊரக வங்கிகளுக் கான உற்பத்திக் கடனுதவி ஆகும். ரூ.1,850 கோடி மாநில அரசுக்கு உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு வழங்கப்பட்டதாகும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தொகையை கூட்டுறவு வங்கிகள் மறுசீரமைப்பு செய்தால் அத்தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க நபார்டு தயாராக உள்ளது.

இவ்வாறு நாகூர் அலி ஜின்னா கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.