Breaking News
‘விவேகம்’ டீஸர் வெளியானது: படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ டீஸர் வெளியானது. அதற்கு தமிழ் திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்கள்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் மே 11ம் தேதி ‘விவேகம்’ டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. முயற்சியைக் கைவிடாதே (NEVER EVER GIVEUP)” என்று அஜித் பேசியுள்ள வசனம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

‘விவேகம்’ டீஸருக்காக அஜித்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.