பிரதமர் மோடி குறித்து அவதூறு: கூகுள் மீது வழக்குப்பதிவு
பிரதமர் மோடி குறித்து அவதூறு தகவல் தருவதாக, கூகுள் மீது உ.பி.,யில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவதூறு புகார்:
உ.பி., மாநிலம் ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் நந்தகிஷோர் என்பவர் புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2015ல் கூகுள் தேடுதளத்தில் பிரதமர் மோடி குறித்து செய்தியை தேடும் போது, அவர் குறித்து அவதூறாக செய்திகள் கிடைத்தன. இது மனக்காயத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐ.டி., சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஐ.டி., சட்டத்தின் பிரிகளின் கீழ், கூகுள் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டது.
இதுகுறித்து கூகுள் நிறுவன செய்தித்தொடர்பாளர், இப்புகார் குறித்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை எனவும், எனவே கருத்து கூற இயலாது எனவும் தெரிவித்தார்.