புனே- டெல்லி இன்று மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், டெல்லி டேர்டெ வில்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்டீவ் ஸ்மித் தலையிலான புனே அணி 12 ஆட்டத்தில் விளை யாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. தொடர் வெற்றிகளால் மும்பை அணியை போன்று ஆதிக்க அணியாக புனே உருவெடுத்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் புனே அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக முன் னேறிவிடும். இந்த சீசனில் டெல்லி யுடன் 2-வது முறையாக புனே மோதுகிறது. இரு அணிகளும் மோதிய முதற்கட்ட ஆட்டத்தில் புனே அணி 97 ரன்கள் வித்தியாசத் தில் தோல்வியடைந்திருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் புனே அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
புனே அணி தனது கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹைதராபாத்தை வீழ்த்தியி ருந்தது. இந்த ஆட்டத்தில் புனே அணி 148 ரன்களே சேர்த்த போதும், ஜெயதேவ் உனத்கட்டின் அபார பந்து வீச்சால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
5 விக்கெட்கள் வீழ்த்திய உனத் கட், கடைசி ஓவரில் மெய்டனுடன் ஹாட்ரிக் சாதனையும் படைத்திருந் தார். இந்த சீசனில் 17 விக்கெட் கள் கைப்பற்றியுள்ள அவர் இன்றைய ஆட்டத்தில் எதிரணிக்கு நெருக்கடித் தரக்கூடும். இதேபோல் 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள இம்ரன் தகிரும் அணிக்கு பலம் சேர்ப்பவராக உள்ளார்.
டெல்லி அணி இந்த சீசனில் கணிக்க முடியாத அணியாக திகழ்கிறது. 200 ரன்கள் இலக்கை அசால்ட்டாக துரத்திப் பிடிக்கும் டெல்லி அணி திடீரென 70 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியையும் சந்தித்துள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை அந்த அணி இழந்து விட்டாலும் ஆறுதல் வெற்றியை பெற்று வருகிறது. கடைசி ஆட்டத்தில் குஜராத் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியிருந்தது.
195 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 2 பந்துகள் மீதம் இருக்க வெற்றியை வசப்படுத்தியது. இளம் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் 57 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். கருண் நாயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவர்களாக உள்ளனர்.