Breaking News
27 முறை பறந்து ரூ. 275 கோடி செலவில் 43 நாடுகளுக்கு மோடி வெளிநாடு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி 2014- ஜூன் முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் வரையில் 43 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ. அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். அதுமுதல் பிரதமராக மோடி, வெளிநாடுகளுடன் பரஸ்பரம், நல்லுறவு, ஒத்துழைப்பை நல்கும் விதமாக அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.

27 முறை-43 நாடுகள்

இந்நிலையில் கடந்த 2014-16-ம் ஆணடுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்கள், செலவினங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை பூட்டானில் துவக்கி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ஜப்பான் நாடு வரை 27 முறை வெளிநாடு பயணம் என 43 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப். 9 ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் பிரான்ஸ், ஜெர்மனி,கனடா நாடுகளுக்கு சென்ற வகையில், அதிகபட்சமாக ரூ. 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்றும், கடந்த 2016 செப்டம்பர் மாதம் லாவோஸ் நாடு சென்ற வரையில் 3 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண மொத்த செலவு ரூ. 275 கோடி. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.