Breaking News
ஆட்சி தானாக கவிழும்: மைத்ரேயன் கணிப்பு

தமிழக அரசு, அதன் பாராம் தாங்காமல் தானாகவே கவிழும் என ஓ.பி.எஸ்., ஆதரவாளரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான மைத்ரேயன் கூறினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. இரண்டுமே தேடக்கூடிய நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலை நிலவுகிறது. தொழிற்சாலைகள் வெளிமாநிலத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மர்மமான மரணங்கள் தொடர்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு எடப்பாடி நடவடிக்கை எடுப்பதில்லை.

இஷ்டத்திற்கு ஆட்டம்:

அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்படுகிறன்றன. வழக்குகளை சந்திக்கின்றனர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காமராஜ் மீது வழக்கு, சரோஜா, பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். ஜெயலலிதா இருந்த போது ராணுவ கட்டுப்பாட்டுடன் அனைவரும் செயல்பட்டனர். ஆனால், தற்போது அனைவரும் இஷ்டம் போல் செயல்படுகின்றனர்.

கூவத்தூர் பாய்ஸ்:

ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. சட்டசபை தேர்தல் விரைவில் வரும் ஒ.பி.எஸ்., விரைவில் அமைச்சராவார். இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும். ‘கூவத்தூர் பாய்சை’ பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொண்டர்களை பற்றி தான்கவலைப்படுகின்றோம். தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.