ஆதியோகி சிலைக்கு ‘கின்னஸ்’ விருது
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, 112 அடி ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக, ‘கின்னஸ்’ புத்தகம் அங்கீகரித்து உள்ளது.
சுற்றுலா தலம்:
கோவை அருகே, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட, 112 அடி உயர பிரம்மாண்ட ஆதியோகி சிலையை, பிப்., மாதம், மகா சிவராத்திரியன்று, பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் சிறப்பு கருதி, ஆதியோகி சிலையை, அதிகாரப்பூர்வ சுற்றுலா தலமாக, மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
‘கின்னஸ்’ விருது:
உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக, ஆதியோகி சிலையை, கின்னஸ் நிறுவனம் கவுரவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தற்போது, கின்னஸ் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், 112 அடி உயரத்தில், மூன்று சிலைகள் இந்தியாவின் இதர, மூன்று திசைகளிலும் அமைக்க வாய்ப்புள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.