Breaking News
ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சமித், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசிய மல்யுத்த போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சமித், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானின் டாய்கி யமாமோட்டோவை வீழ்த்தி னார். இதைத்தொடர்ந்து அவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி னார். அரையிறுதிச் சுற்றில் தஜிகிஸ்தான் வீரரான பர்கோட் அனாகுலோவை 7-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதிச்சுற்றில் இரான் வீரரான யதோலா மொகமதுகாசீமை அவர் எதிர்கொண்டார். இப்போட்டியில் சமித் 2-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இறுதிப் போட்டியில் தோற்ற அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இப்போட்டியில் சமித் வெள் ளிப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஆசிய மல்யுத்த போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 10 – ஆக உயர்ந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.