Breaking News
தமிழக உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் தகவல்

இன்று (திங்கட்கிழமை) தஞ்சை, சேலம், தருமபுரி, கோவை, விழுப்புரம் முதலிய உள் மாவட்டங்களில் சில இடங்களில் கோடை மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

மதுரை விமானநிலையம் 5 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் 4 செ.மீ. நத்தம், திருமங்கலம், மேலூர் தலா 2 செ.மீ. பெரியநாயக்கன் பாளையம், கோத்தகிரி, சோழவந்தான், மேட்டுப்பட்டி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.