அரசியல்ரீதியாக டொனால்ட்டிற்கு எதிராக புதிய இயக்கம்: ஹிலரி அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக புதிய அரசியல் இயக்கத்தை முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளின்டன் துவங்க உள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலரி கிளின்டன் போட்டியிட்டார். இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டெனால்ட் டிரம்ப்பிடம் தோல்வியுற்றார்.
இந்நிலையில் டெனால்ட்டிரம்பிற்கு எதிராக ஹிலரி கிளின்டன் புதிய அரசியல் நடவடிக்கை குழுவை துவக்கியுள்ளார்.‛‛ ஒன்றிணைவோம் ” என்ற கோஷத்துடன் துவங்க திட்டமிட்டுள்ளார். இந்த இயக்கத்திற்காக ஐந்து முற்போக்கு குழுக்களை அமைத்து நிதி திரடடும்பணியில் ஹிலரி இறங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஹிலரி கிளின்டன் தனது ஆதரவாளர்களுக்கு டுவீட்டர். , இ.மெயில் மூலம் அழைப்பு விடுத்து தனது புதிய அரசியல் நடவடிக்கை குறி்த்தும், டிரம்பின் நிர்வாக சீர்கேடு குறித்தும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.