Breaking News
தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர்; ஆங்கிலத்தில் நன்றி சொன்ன முதல்வர்

தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, ஆங்கிலத்தில் நன்றி கடிதம் அனுப்பினார்.

தமிழில் வாழ்த்து:

தமிழக முதல்வர் பழனிசாமியின் பிறந்த நாள், மே, 12ல், கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழில், கடிதம் அனுப்பினார். அதில், ‘உங்கள் பிறந்த நாள் அன்று, என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து, இன்றுபோல் என்றென்றும், மக்களுக்கு சேவை செய்ய, உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என, குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து அனுப்பிய பிரதமருக்கு, நன்றி தெரிவித்து, முதல்வர் பழனிசாமி, ஆங்கிலத்தில், கடிதம் அனுப்பி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.