இந்திய உணவு விடுதிக்கு சிக்கல்
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் வசிப்பவர், ஷின்ரா பேகம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், லண்டனில், ‘கரி ட்விஸ்ட்’ என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார். இந்நிலையில், பேஸ்புக் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: லண்டனில், நர மாமிசம் விற்றதாக, இந்திய உணவு விடுதி உரிமையாளர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். அந்த உணவு விடுதியில், ஒன்பது மனித உடல்கள், சமைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த உணவு விடுதி மூடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஷின்ரா பேகம் நடத்தி வரும் கடையில்தான், நர மாமிசம் வழங்கப்பட்டதாக, தகவல் பரவியது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:நர மாமிசம் விற்கப்படுவதாக, பேஸ்புக்கில் பரப்பப்பட்ட புரளியால், உணவு விடுதியை தாக்கப்போவதாக, பலர் மிரட்டல் விடுக்கின்றனர். இந்த பொய் செய்தியால், எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள், 60 ஆண்டுகளாக இந்த உணவு விடுதியை நடத்தி வருகிறோம்; தற்போது, இதை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.