Breaking News
‘கேன்ஸ்’ பட விழாவில் ‘சங்கமித்ரா’

கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அம்சமாக, சுந்தர் சி இயக்கத்தில் தயாராகும், சங்கமித்ரா என்ற தமிழ் படத்தின் துவக்க விழா, நேற்று நடந்தது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில், ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடப்பது வழக்கம். 70வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது. இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகையர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், பாகுபலி போன்ற மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படத்தை இயக்க, தமிழகத்தை சேர்ந்த, பிரபல இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். வரலாற்று பின்னணியில் தயாராகும் இந்த படத்தில், ‘ஜெயம்’ ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று
நடந்தது.

விழாவில் ஜொலித்த தீபிகா : வித்தியாசமான, அழகிய உடையணிந்து, கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தார். இவரது தோற்றம், சிகை அலங்காரம், நடை ஆகியவை, சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.