ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்: பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்
தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் 2-வது ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த அபேய் குப்தா 56.47 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற முதலாவது ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரானை சேர்ந்த சஜ்ஜத் ஹஸ் சென்ஸ் 53.06 மீட்டர் தூரம் எறிந் ததே சாதனையாக இருந்தது. இதனை அபய் குப்தா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஹரியாணாவை சேர்ந்த மற் றொரு வீரரான சகில் சில்வால் 54.58 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்ததுடன் வெளிப்பதக்கம் கைப்பற்றினார். மலேசியாவின் இங்க் பாவோமுக்கு (52.48 மீட்டர்) வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. ஹரியாணாவை சேர்ந்த சஞ்சய் குமார் பந்தய தூரத்தை 45:30.39 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பானின் மசரு சுசூகி (45:47.41) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் யாவ் ஜாங் (46:12.58) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
கடைசி நாளான நேற்று ஆடவருக்கான மெட்லே ரிலேவில் இந்தியாவின் குர்விந்தர் சிங், பலேந்தர் குமார், மணீஷ், அக் ஷய் நயின் ஆகியோரை உள்ளடக்கிய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி பந்தய தூரத்தை 1:55.62 விநாடிகளில் கடந்தது. ஈட்டி எறிதலில் இந்தியாவின் ரோஹித் யாதவ் வெள்ளிப் பதக்கமும், அவினேஷ் யாதவ் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
இந்த தொடரில் இந்தியா 5 தங் கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக் கத்துடன் மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. சீனா 16 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலத்துடன் முதலிடத்தையும், சீன தைபே 6 தங்கம், 7 வெள்ளி, 2 வெண் கலத்துடன் இரண்டாவது இடத் தையும் பிடித்தன.