Breaking News
‘பாகுபலி’ கதாபாத்திரங்களின் ஃபேஸ்புக் ஸ்டிக்கர் வெளியீடு

‘பாகுபலி’ கதாபாத்திரங்களை வைத்து ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் ‘பாகுபலி 2’. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ‘பாகுபலி 2’. இதுவரை ரூ.1500 கோடியைத் தாண்டியுள்ளது ‘பாகுபலி 2’ வசூல். உலகளவில் பலரும் ‘பாகுபலி’ படத்தைப் பற்றி தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், ‘பாகுபலி’ படக்குழுவினர் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்ட்களில் ஸ்டிக்கர் மூலமாக கருத்துகளை வெளியிடும் முறையுள்ளது. அதில் ‘பாகுபலி’ படத்தின் கதாபாத்திரங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக்.

இந்திய திரையுலகில் முதன் முறையாக ஃபேஸ்புக் ஸ்டிக்கர் வெளியாகும் படமாக ‘பாகுபலி’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.