இன்று சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகாது
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்க் பிரச்னை காரணமாக இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை மார்க் வழங்கும் முடிவை ரத்து செய்வதாக ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், சிபிஎஸ்இ அறிவிப்பை ரத்து செய்ததுடன் கருணை மார்க் வழங்கவும் நேற்று உத்தரவிட்டது. இதனால் கோர்ட் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ இன்று ஆலோசனை நடத்துகிறது. அதுன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ இயக்குனர் சதூர்வேதி, பிற்பகலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரை சந்தித்து பேச உள்ளார்.
இதனால் எதிர்பார்த்தபடி இன்று ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி ஐகோர்ட் உத்தரவால் அடுத்த வாரத்திலேயே ரிசல்ட் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.