Breaking News
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் வாழ்க்கை படம் இன்று பிரத்யேக காட்சி

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர் சச்சின் டெண்டுல்கர். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ். இந்த படம் உலகம் முழுவதும் மே 26-ம் தேதி வெளியாக உள்ளது. சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மே 26-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிரத்யேக காட்சி மும்பை வெர்சோவா பகுதியில் இருக்கும் திரையரங்கில் படம் திரையிடப்படுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் கலந்ழது கொள்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.