ஜேம்ஸ்பாண்ட் -007 நடிகர் ரோஜர் மூர் மறைந்தார்
உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ்பாண்ட் 007 சீரிஸ் திரைப்படங்களில் 70 களில் பாண்டாக நடித்த பிரபல நடிகர் ரோஜர் மூரகசிய உளவாளி, ஏஜெண்ட்-007, பாண்ட் போன்ற புனைப்பெயர்களால் வர்ணிக்கப்படும் சுவாரசியமான கதாபாத்திரம் ‘ஜேம்ஸ் பாண்ட்’. 19-ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல நடிகர்களின் வித்தியாசமான நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உயிர்ப்புடன் துப்பறிந்து வருகிறது.
அதிரடியான சாகசங்களுடன் ஆக்ஷன் திரைப்படங்களை ரசிப்பவர்களின் முதல் விருப்பமாக இருப்பது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள். மிடுக்கான கோட் சூட் உடையில் உலா வந்து உளவாளிகளுக்கு என்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் எதிரிகளை பந்தாடுவது ஜேம்ஸ் பாண்டின் ஸ்டைல். கதாபாத்திரமாக நடிக்கும் நடிகர்கள் வேறுபட்டாலும் ஜேம்ஸ் பாண்டின் குணாதிசயங்கள் மாறுவதில்லை. இத்தகைய அழுத்தமான கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரர் இங்கிலாந்தை சேர்ந்த ‘அயன் பிளமிங்’.
முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி,சீன் கானரியை தொடர்ந்து ஜேசன் லாசன் பீ ஜேம்ஸ்பாண்டாக நடித்தார்,தொடர்ந்து ரோஜர் மூர் நடித்தார். ரோஜர் மூர் லிவ் ஆண்ட் லெட் டை’ மற்றும் ‘தி ஸ்பை ஹூ லவ்டு மீ’ உள்பட ஏழு திரைப்படங்களில் பிரபல ஜேம்ஸ்பாண்ட் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சர் ரோஜர் மூர் தனது 89-வது வயதில் காலமாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தார் அறிவித்துள்ளனர். நடிகர் ரோஜர் மூர் நேற்று உடல்நலக் குறைவால் அவரது மகனது இல்லத்தில் காலமானார். சுவிட்ஸர்லாந்தில் தனது மகனுடன் வசித்து வந்த ரோஜர் மூருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்ததாகவும் அதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வயோதிகத்தின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் ரோஜர் மூர் நேற்று மரணமடைந்து உள்ளார்.
லண்டன் ஸ்டாக்வெல்லில் 1927 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ரோஜர் மூர் பிறந்தார். ஆரம்பத்தில் மாடலாக அறிமுகமாகி பின்னர் படிப்படியா துணை நடிகர் வேடங்களில் தோன்றினார்.பின்னர் கொஞ்சம் முன்னேறி தொலைக்காட்சி தொடர்களின் நாயகன் வேடமேற்றார்.
ஜேம்ஸ் பாண்ட் யூனிட்டுடன் ரோஜர் மூர் இணைந்தது 1972 ஆம் ஆண்டில் தான். அப்போது தொடங்கியது மூரின் ஜேம்ஸ் பாண்ட் பயணம். தொடர்ந்து 7 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக மூர் நடித்தார்.வயதான பின்னரும் ஜேம்ஸ்பாண்டாகக் கலக்கிய நடிகர் மூர் ஒருவரே.ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே மூருக்கு வயது 45.
Live and let die, The man with the golden gun, The spy who loved me, Moon raker, For your eyes only, Octopussy, A view to a kill ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
ரோஜர் மூர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர். முதல் மனைவி டோர்ன் வான் ஸ்டெய்ன்,இரண்டாம் மனைவி வேல்ஸ் பாடகி டோரத்தி,மூன்றாம் மனைவி இத்தாலிய நடிகை லூயிஸா மாட்டியோலி.நான்காம் மனைவி கிறிஸ்டினா.