தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று(மே 26) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தென் கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
வெயில் சதம்:
இந்நிலையில் நேற்று(மே 25) தமிழகத்தில் 8 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹூட் பதிவாகியுள்ளது.
திருத்தணி – 108 டிகிரி பாரன்ஹூட்
வேலூர் – 105 டிகிரி பாரன்ஹூட்
கரூர் பரமத்தி – 103 டிகிரி பாரன்ஹூட்
கடலூர் – 102 டிகிரி பாரன்ஹூட்
நாகப்பட்டினம் – 102 டிகிரி பாரன்ஹூட்
பரங்கிப்பேட்டை – 102 டிகிரி பாரன்ஹூட்
திருச்சி – 102 டிகிரி பாரன்ஹூட்
புதுச்சேரி- 101 டிகிரி பாரன்ஹூட்
பாளையங்கோட்டை – 101 டிகிரி பாரன்ஹூட்
காரைக்கால் – 100 டிகிரி பாரன்ஹூட்
சென்னை – 100 டிகிரி பாரன்ஹூட்