அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்: நாடாளுமன்றம் ஒப்புதல்
அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல் தாப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளித் துள்ளது.
அமெரிக்காவில் 50 மாகா ணங்கள் உள்ளன. அவற்றில் நான்கு அல்லது ஐந்து மாகாணங்களில் இருந்து தொடரப்படும் மேல் முறை யீட்டு வழக்குகளை விசாரிக்க ‘சர்க்யூட்’ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அமெரிக்கா முழு வதும் 13 ‘சர்க்யூட்’ மேல்முறை யீட்டு நீதிமன்றங்கள் செயல் படுகின்றன.
இதில் கென்டகி, டென்னிஸி, ஓஹியோ, மிக்ஸிகன் ஆகிய மாகாணங்களின் மேல்முறை யீட்டு வழக்குகளை 6-வது ‘சர்க்யூட்’ நீதிமன்றம் விசாரிக் கிறது. இந்த நீதிமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஒரு நீதிபதி பணியிடம் காலியாக இருந்தது.
செனட்டில் வாக்கெடுப்பு
இந்நிலையில் கென்டகி மாகாணத்தின் கிழக்கு மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த அமுல் தாப்பரை 6-வது சர்க்யூட் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் பரிந்துரை செய்தார்.
இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் நேற்றுமுன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அமுல் தாப்பரை நீதிபதியாக நியமிக்க பெரும் பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 48 வயதாகும் தாப்பர் 6-வது சர்க்யூட் நீதிமன்றத்தின் நீதி பதியாக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நீதிபதி பணியிடம் காலியாக இருந்தது. அந்த இடத்துக்கு அமுல் தாப்பர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும் அப்போது அவருக்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைக்க வில்லை.