நாளையுடன்(மே 28) முடிகிறது ‘அக்னி நட்சத்திரம்’
அக்னி நட்சத்திரம்’ எனும் கடும் கோடை காலம், நாளையுடன்(மே 28) முடிவடைகிறது.
கத்திரி வெயில்:
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே 4ம் தேதி துவங்கியது. முதல் ஒரு வாரம் தணிந்தே காணப்பட்ட வெயில், பின் வெளுத்து வாங்கியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹூட்டிற்கும் அதிகமாக தினமும் பதிவாகியது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் (மே 28) முடிவடைகிறது. இதனையடுத்து வெயின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச வெப்பம்:
அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது. திருத்தணியில் மே 16ம் தேதி, தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக 114 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உஷ்ணம் ஏத்தியது. கரூர் பரமத்தியிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தது.