அடங்காத வடகொரியா : மீண்டும் ஏவுகணை சோதனை
ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான ஏவுகணையை மீண்டும்பரிசோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டு நேரப்படி காலை 7.30 மணியளவில் தெற்கு கடற்பகுதியில் சிறிய ரக அணு ஆயுதங்களை சுமந்து 450 கிலோ மீட்டர் வரை செல்லும் ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியானது. குறுகிய கால இடைவெளியில் மூன்று ஏவுகணைகளை அந்நாடு பரிசோதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்த சற்று நேரத்திலேயே, தென்கொரிய அதிபர் மூன் ஜெ-இன் தலைமையிலான அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
வடகொரியாவின் இந்த செயல் ஐ.நா. விதிமுறைகளை மீறுவதை காட்டுகிறது என ஜப்பான் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.