காந்தியை கொன்றது கோட்சே மட்டுமா? கிளம்பியது புது சர்ச்சை
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே மட்டுமா என்ற சந்தேகத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு:
இதுகுறித்து மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஸ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி மரணத்திற்கு கோட்சே மற்றும் சாவர்க்கர் மட்டுமே குறை கூறி வந்துள்ளோம். ஆனால் காந்தி மரணத்தில் பெரும் சதி அடங்கியுள்ளது. பழைய பத்திரிகை செய்திகள் மற்றும் எனது ஆராய்ச்சியின் படி, காந்தி சுடப்பட்ட போது அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தது. கோட்சே சுட்ட துப்பாக்கியில் 7 குண்டுகள் பொருத்தலாம்.
சுட்டது யார்?
ஆனால் காந்தியை சுட்ட பின், கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து 4 குண்டுகள் எடுக்கப்பட்டது. அப்படியானால் கேட்சேவின் துப்பாக்கியில் இருந்து 3 குண்டுகள் மட்டுமே காந்தியின் உடலில் பாய்ந்துள்ளது. எனில் காந்தியின் உடலில் இருந்த அந்த 4வது குண்டை யார் சுட்டது? கோட்சே மட்டுமன்றி மற்றுமொரு நபராலும் காந்தி சுடப்பட்டாரா?. இதுகுறித்து புது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.