இந்தியா பொறுமையாக இருக்க வேண்டும்: நீளமான பாலம் திறப்பால் சீனா கடுப்பு
எல்லை பிரச்னையில் இந்தியா பொறுமையாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும் என சீனா கூறியுள்ளது.
அருணாச்சலின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், இந்தியா இதனை நிராகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாமையும், அருணாச்சலையும் இணைக்கும் இந்தியாவின் நீளமான பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் மூலம் அருணாச்சல் பகுதிக்கு ராணுவம் எளிதில் சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: எல்லை பகுதியில் அமைதி நிலவவும், ஸ்திரத்தன்மை தொடரவும், பிரச்னைக்கு இறுதி தீர்வு ஏற்படும் வரை இந்தியா பொறமையாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்படும் என நம்புகிறோம். இந்தியா சீனா எல்லை பிரச்னையில், எங்களின் நிலை தெளிவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.