சென்னை சில்க்ஸில் தீயை கட்டுப்படுத்த முடியாததால் தீயணைப்பு வீரர்கள் திணறல்
சென்னை தியாகராயர் நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் முன்பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. 7 மாடி கட்டிடத்தை இடித்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் அதிகாலை முதல் தீப்பற்றி எரிந்து வருகிறது. கிட்டதட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது. காலையில் பிடித்த தீயால் தியாகராயர் நகரே கரும்புகை மண்டலமாகி உள்ளது. பல மணிநேரம் போராடியும் கரும்புகையை கட்டுப்படுத்த முடியாததால் கட்டிடம் முன் பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. தீயை கட்டுக்குள் கொண்டுவர கட்டிடத்தின் முன் பகுதியை உடைத்து தண்ணீரை பீயச்சி அடிக்கின்றனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அடித்தளத்தில் ஏற்பட்ட தீ தொடர்ந்து மேல் தளங்களுக்கும் முழுவதும் பரவியது. தீயணைப்பு வீரர்களே உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீ கட்டுப்படுத்த முடியாத அளவில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. கட்டட பகுதியில் உள்ள மக்கள் 100 மீட்டருக்கு அப்பால் வெளியேற்றப்படுகின்றனர். ஏற்கனவே இப்பகுதி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கட்டிடத்தின் முன் பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.