மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: அபு சலீமுக்கு என்ன தண்டனை?
மும்பையில், 1993ல் நடந்த, தொடர்பு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான, தாதா அபு சலீம் உள்ளிட்டோர் மீதான தீர்ப்பு, ஜூன் 16ல் வழங்கப்படவுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு:
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில், 100க்கும் மேற்பட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. முக்கிய குற்றவாளி யாகூப் மேமன் துாக்கிலிடப்பட்டான். ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.எனினும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அனிஸ் இப்ராஹிம் உட்பட, 27 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
என்ன தண்டணை?
இந்த வழக்கில் தொடர்புடைய தாதா அபு சலீம், ஹிந்தி நடிகை மோனிகா பேடியுடன், போர்ச்சுகல் தப்பிச் சென்றான்; 2005ல் அவன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டான். இதையடுத்து, அபு சலீம், முஸ்தபா தோசா, பிரோஜ் கான், தாஹீர், ரியாஜ் சித்திக் உள்ளிட்டோர் மீதான விசாரணை, மும்பை தடா கோர்ட்டில் தனியாக நடந்து வருகிறது. ‘இந்த வழக்கில், ஜூன் 16ல் தீர்ப்பு வழங்கப்படும்’ என, கோர்ட் நேற்று அறிவித்தது.