தர வேண்டியது 192; தந்தது 69 டி.எம்.சி.,
வரலாற்றில் முதல் முறையாக, கர்நாடகா, 2016 – 17ம் ஆண்டில் தான், மிக குறைந்தபட்சமாக, 69 டி.எம்.சி., நீர் மட்டும் வழங்கியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடகா, ஆண்டுதோறும் ஜூன், 1 முதல் மே, 31 வரை, 192 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணைக்கு வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 1 முதல், நேற்று வரை, 69, டி.எம்.சி., நீர் மட்டும் விடுவித்துள்ளது. மேட்டூர் அணை கட்டிய பின், கர்நாடகா, 2016 – 17ம் ஆண்டில் தான் மிக குறைந்த நீரை, தமிழகத்துக்கு விடுவித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை மட்டுமின்றி, சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனை அடைந்தனர்.