கோவையை மிரட்டும் காட்டு யானை : 4 பேர் பலியானதால் மக்கள் அச்சம்
கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த யானை தாக்கியதில் இதுவரை ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் பலியாகி உள்ளனர். போத்தனூர் கணேசபுரத்தில் இன்று காலை 6 மணிக்கு காட்டு யானை தாக்கி, வீட்டின் வெளியே படுத்திருந்த ஒரு சிறுமி மற்றும் மூதாட்டி பலியாகினர். முன்னதாக இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்ற ஜோதி, நாகரத்தினம் ஆகிய 2 பேரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.வனத்துறை எச்சரிக்கை : யானை ஊருக்கள் சுற்றுவதால் போத்தனூர், மதுக்கரை, சுந்தராபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். யானையை பிடிப்பதற்காக யானைகள் முகாமில் இருந்து 4 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை யானையை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தால், அதனை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் மற்றும் போலீசார் குழு போத்தனூரில் முகாமிட்டுள்ளது. போத்தனூரில் எட்டிமடை எம்.எல்.ஏ., சண்முகமும் நேரில் ஆய்வ செய்து வருகிறார்.