Breaking News
ஜி.எஸ்.டி., இணையதள பதிவு : வணிகர்களுக்கு அரசு உத்தரவு

வணிகர்கள் அனைவரும், ஜி.எஸ்.டி., இணைய தளத்தில் உடனடியாக, தங்களின் விபரங்களை, பதிவு செய்ய வேண்டும்’ என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்புக்காக, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலையில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தகவல் தொழிற்நுட்ப கட்டமைப்பு மற்றும் மென்பொருள் உருவாக்கும் பணியை, சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு நிறுவனம் மேற்கொண்டது.
இந்நிறுவனம், ஜி.எஸ்.டி., தொடர்பாக, www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. தமிழகத்தில், பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும், தாங்களாகவே இந்த இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த இணையதளத்தில் பதிவு செய்ய, தற்காலிக ஐ.டி., மற்றும், ‘பாஸ்வேர்டு’ மின்னஞ்சல் மற்றும் வணிக வரித் துறை இணையதளமான, https://ctd.tn.gov.in மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வணிகர்கள், இந்த தற்காலிக ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டுடன், இணையதளத்தை உபயோகப்படுத்தி, இந்தப் பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., பதிவு செய்யும் இணையதளம், நேற்று முன்தினம் முதல் மீண்டும் செயல்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்படுவதை ஒட்டி, அனைத்து பதிவு பெற்ற வணிகர்களும், ஜி.எஸ்.டி., இணையதளத்தில் இணையும் வசதி, நாடு முழுவதும், 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தமிழக வணிக வரித் துறையில் பதிவு பெற்ற, வணிகர்கள் அனைவரும், தங்களுடைய மின்னணு கையொப்ப சான்றிதழ் அல்லது, ‘ஆதார்’ எண்
உதவியுடன், மின் கையொப்பமிட்டு, தங்களுடைய விபரங்களை, பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி., இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்த வணிகர்களில், பெரும்பாலானோர் கையொப்பத்துடன் பதிவு செய்யவில்லை. எனவே, அனைத்து வணிகர்களும், உடனடியாக, தங்களுடைய விபரங்களை, மின்னணு கையொப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.