பெரிய திரையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் புகழ் பிரியா!
பிரபல செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக மூன்று வருடங்கள் இருந்தவர் பிரியா பவானி சங்கர். சீரியல் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கல்யாணம் முதல் காதல் வரை புகழ் பிரியா.
இவர் சீரியலில் இருந்து விலக போவதாகவும், வெளிநாடு சென்று படிக்கப்போவதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.
இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஒரு புதிய படம் மூலம் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த படம் யாருடன் நடிக்கிறார் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றி அதிகாரபூர்வ செய்தி வெளியாக இருக்கிறது.